Amen Alleluia – ஆமென் அல்லேலூயா - Christking - Lyrics

    Amen Alleluia – ஆமென் அல்லேலூயா



    ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
    ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

    தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
    துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென்

    1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
    தாளத்தைச் சங்கரித்து – முறித்து
    பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
    பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்

    2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
    தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
    ஜீவனே விடிந்து – தேவாலயத்
    திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென்

    3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
    மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
    பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
    பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென்






    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Amen Alleluia – ஆமென் அல்லேலூயா Amen Alleluia – ஆமென் அல்லேலூயா Reviewed by Christchoir on August 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.