Anbin Devan Yesu – அன்பின் தெய்வம் - Christking - Lyrics

    Anbin Devan Yesu – அன்பின் தெய்வம்



    அன்பின் தெய்வம் இயேசு
    ஆறுதல் தருபவர்
    மார்பில் சாய்கின்றேன்
    மகிழ்ந்து பாடுவேன் – 2

    1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
    சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
    வாழ்வது நானல்ல என்னில்
    இயேசு வாழ்கின்றார்

    2. இயேசு பேசும்போது – என்
    உள்ளம் உருகுதே அவர்
    வார்த்தை படிக்கும் போது என்
    வாழ்வு மாறுதே
    வேதம் ஏந்துவேன் வெல்வேன்
    அலகையை – தினம்

    3. கண்ணீர் சிந்தும்போது – மனக்
    கண்ணில் தெரிகின்றார்
    கவலை நெருங்கும்போது – அவர்
    கரத்தால் அணைக்கின்றார்
    ஆவி பொழிகின்றார்
    ஆற்றல் தருகின்றார் – எனக்கு




    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Anbin Devan Yesu – அன்பின் தெய்வம் Anbin Devan Yesu – அன்பின் தெய்வம் Reviewed by Christchoir on September 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.