Anbarin Nesam - அன்பரின் நேசம் : Lyrics - Christking - Lyrics

    Anbarin Nesam - அன்பரின் நேசம் : Lyrics

    Anbarin Nesam

    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
    அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
    துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய

    1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
    என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய

    2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
    வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய

    3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
    விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய

    4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
    முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய

    5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
    மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய

    Worship Songs Lyrics,
    Anbarin Nesam - அன்பரின் நேசம் : Lyrics Anbarin Nesam - அன்பரின் நேசம் : Lyrics Reviewed by Christking on April 21, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.