Vaazhga Vaazhga Bharatha Desam - வாழ்க வாழ்க பாரத தேசம் : Lyrics - Christking - Lyrics

    Vaazhga Vaazhga Bharatha Desam - வாழ்க வாழ்க பாரத தேசம் : Lyrics

    Vaazhga Vaazhga Bharatha Desam

    வாழ்க வாழ்க பாரத தேசம்
    வாழ்க வாழ்க பாரத தேசம் – (2)

    1. கட்சி கொடிகள் பல பல வகையாம்
    தேசக் கொடியை காக்கவே அவையாம் – (2)
    பாரத தேசம் சுதந்தர தேசம்
    எத்தனை சலுகை! எத்தனை உரிமை!

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    2. நாவின் மொழிகள் பல பல உண்டு
    உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2)
    அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே
    ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம்
    அனைத்து இந்தியர் சமமென வேண்டும் – (2)
    ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்
    விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்
    நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் – (2)
    அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு
    சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்
    வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் – (2)
    கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை
    என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்
    மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் – (2)
    சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்
    அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே
    அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் – (2)
    அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்
    இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே

    வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

    Worship Songs Lyrics,
    Vaazhga Vaazhga Bharatha Desam - வாழ்க வாழ்க பாரத தேசம் : Lyrics Vaazhga Vaazhga Bharatha Desam - வாழ்க வாழ்க பாரத தேசம் : Lyrics Reviewed by Christking on April 30, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.