Vaarum Naam Ellarum - வாரும் நாம் எல்லாரும் : Lyrics - Christking - Lyrics

    Vaarum Naam Ellarum - வாரும் நாம் எல்லாரும் : Lyrics

    Vaarum Naam Ellarum

    வாரும் நாம் எல்லாரும் கூடி
    மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்
    மாசிலா நம் இயேசு நாதரை
    வாழ்த்திப் பாடுவோம் ஆ!

    1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
    தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – வாரும்

    2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
    மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – வாரும்

    3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
    நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – வாரும்

    4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
    மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – வாரும்

    5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
    பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – வாரும்

    Worship Songs Lyrics,
    Vaarum Naam Ellarum - வாரும் நாம் எல்லாரும் : Lyrics Vaarum Naam Ellarum - வாரும் நாம் எல்லாரும் : Lyrics Reviewed by Christking on April 30, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.