varavenum enatharasae - வரவேணும் எனதரசே : Lyrics - Christking - Lyrics

    varavenum enatharasae - வரவேணும் எனதரசே : Lyrics

    varavenum enatharasae

    வரவேணும் எனதரசே
    மனுவேல், இஸ்ரேல் சிரசே
    அருணோதயம் ஒளிர் பிரகாசா
    அசரீரி ஒரே சரு வேசா

    1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
    ஆதார நிராதரா அன்பான சகோதரா
    தாதாவும் தாய் சகலமும் நீயே
    நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்

    2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
    முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
    இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
    இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்

    3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
    கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
    ஞானாகரமே, நடு நிலை யோவா
    நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்

    Worship Songs Lyrics,
    varavenum enatharasae - வரவேணும் எனதரசே : Lyrics varavenum enatharasae - வரவேணும் எனதரசே : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.