Varum Ayya Pothagare - வாரும் ஐயா போதகரே : Lyrics - Christking - Lyrics

    Varum Ayya Pothagare - வாரும் ஐயா போதகரே : Lyrics

    Varum Ayya Pothagare

    1. வாரும் ஐயா போதகரே
    வந்தெம்மிடம் தங்கியிரும்
    சேரும் ஐயா பந்தியினில்
    சிறியவராம் எங்களிடம் – வாரும்

    2. ஒளிமங்கி இருளாச்சே
    உத்தமனே, வாரும் ஐயா
    கழுத்திரவு காத்திருப்போம்
    காதலனே கருணை செய்வாய் – வாரும்

    3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
    நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
    தாமதமேன் தயை புரிய
    தற்பரனே, நலம் தருவாய் – வாரும்

    4. உன்றன் மனை திருச்சபையை
    உலக மெங்கும் வளர்த்திடுவாய்
    பந்தமறப் பரிகரித்தே
    பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்

    5. ஆதரையிலென் ஆறுதலே
    அன்பருக்குச் சதா உறவே
    பேதையர்க்குப் பேரறிவே
    பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

    6. பாடும் தேவதாசரின் கவி
    பாரினில் கேட்டனுதினமும்
    தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
    திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்

    Worship Songs Lyrics,
    Varum Ayya Pothagare - வாரும் ஐயா போதகரே : Lyrics Varum Ayya Pothagare - வாரும் ஐயா போதகரே : Lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.