Yen Intha Padukal - ஏன் இந்தப் பாடுதான்! : Lyrics

    Yen Intha Padukal - ஏன் இந்தப் பாடுதான்! : Lyrics

    Yen Intha Padukal
    ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
    என்ன தருவேன் இதற்கீடுநான்?

    ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமிய

    1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
    கெழு மலர்க் காவிடை போகவும்
    அச்சயனே, மனம் நோகவும் – சொல்
    அளவில்லாத் துயரமாகவும்

    2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
    முறை முகம் தரைபட வீழவும்
    மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
    மரண வாதையினில் மூழ்கவும்

    3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
    அகலச் செய்யும் என்றுரைக்கவும்
    செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
    தேவதூதன் வந்து தேற்றவும்

    4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
    பாக உதிர வேர்வை ஓடவும்
    சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
    தாசரும் பதந்தனை நாடவும்

    Worship Songs Lyrics,
    Yen Intha Padukal - ஏன் இந்தப் பாடுதான்! : Lyrics Yen Intha Padukal - ஏன் இந்தப் பாடுதான்! : Lyrics Reviewed by Christking on April 25, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.