Salemin Raja – சாலேமின் ராசா : Lyrics - Christking - Lyrics

    Salemin Raja – சாலேமின் ராசா : Lyrics

    Salemin Raja

    1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
    ஸ்வாமி வாருமேன் – இந்த
    தாரணி மீதினில் ஆளுகை செய்திட
    சடுதி வாருமேன்

    2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
    செல்வக் குமாரனே – இந்த
    சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
    சேதி கேளீரோ?

    3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
    கண் பூத்துப் போகுதே;- நீர்
    சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
    நிறைவேறலாகுதே

    4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
    நாடித் தேடுதே ; – இந்த
    நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
    தேடிவாடுதே

    5. சாட்சியாக சுபவிசேஷம்
    தாரணிமேவுதே; – உந்தன்
    சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
    தாவிக்கூவுதே

    Worship Songs Lyrics,David
    Salemin Raja – சாலேமின் ராசா : Lyrics Salemin Raja – சாலேமின் ராசா : Lyrics Reviewed by Christking on May 29, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.