Seer Thiree Yega Vasthe : Lyrics - Christking - Lyrics

    Seer Thiree Yega Vasthe : Lyrics

    Seer Thiree Yega Vasthe

    சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
    திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !

    பார்படைத்தாளும் நாதா
    பரம சற்பிரசாதா
    நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்

    1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்
    தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ !
    சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய்
    சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய்
    எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார்

    2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது
    எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
    எங்கும் நின் அரசேற
    எவரும் நின் புகழ்கூற‌
    துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார்

    3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌
    பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
    கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
    திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார்

    ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ !
    வாகு தங்கு குருநாதா, நமோ நமோ !
    சருவ லோகாதிபா, நமஸ்காரம் !
    சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் !

    Worship Songs Lyrics,David
    Seer Thiree Yega Vasthe : Lyrics Seer Thiree Yega Vasthe : Lyrics Reviewed by Christking on May 22, 2016 Rating: 5
    Powered by Blogger.