Sthothiram Paadiye Potriduven - ஸ்தோத்திரம் பாடியே : Lyrics - Christking - Lyrics

    Sthothiram Paadiye Potriduven - ஸ்தோத்திரம் பாடியே : Lyrics

    Sthothiram Paadiye Potriduven

    ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்

    1. அற்புதமான அன்பே – என்னில்
    பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
    என்றும் மாறா தேவ அன்பே
    என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

    2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
    ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
    தியாகமான தேவ அன்பே
    திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

    3. மாய உலக அன்பை – நம்பி
    மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
    என்னை வென்ற தேவ அன்பே
    என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

    4. ஆதரவான அன்பே – நித்தம்
    அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
    உன்னத மா தேவ அன்பே
    உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

    5. வாக்கு மாறாத அன்பே – திரு
    வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
    சர்வ வல்ல தேவ அன்பே
    சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

    Worship Songs Lyrics,David
    Sthothiram Paadiye Potriduven - ஸ்தோத்திரம் பாடியே : Lyrics Sthothiram Paadiye Potriduven - ஸ்தோத்திரம் பாடியே : Lyrics Reviewed by Christking on May 14, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.