Sthothiram Thuthi Pathira Ummai - ஸ்தோத்திரம் துதி பாத்திரா : Lyrics - Christking - Lyrics

    Sthothiram Thuthi Pathira Ummai - ஸ்தோத்திரம் துதி பாத்திரா : Lyrics

    Sthothiram Thuthi Pathira Ummai : Key : C-Maj/DISCO/Tempo 105

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
    இன்றும் என்றும் துதித்திடுவேன்

    காத்தீரே என்னைக் கருத்தாக
    வழுவாமல் என்னை உமக்காக
    எடுத்தீர் எனையும் உமக்காக
    கொடுத்தீர் உமையும் எனக்காக

    1. வல்ல வான ஞான வினோதா
    துதியே துதியே துதித்திடுவேன்
    எல்லாக் குறையும் தீர்த்தீரே
    தொல்லை யாவும் தொலைத்தீரே
    அல்லல் யாவும் அறுத்தீரே
    அலையும் எனையும் மீட்டீரே

    2. நம்பினோரைக் காக்கும் தேவா
    துதியே துதியே துதித்திடுவேன்
    அம்புவியாவும் படைத்தீரே
    அம்பரா உந்தன் வாக்காலே
    எம்பரா எல்லாம் ஈந்தீரே
    நம்பினோர்க் குந்தன் தயவாலே

    3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
    துதியே துதியே துதித்திடுவேன்
    அண்ணலே உந்தன் அருளாலே
    அடியாரைக் கண் பார்த்தீரே
    மன்னா எமக்கும் நீர் தாமே
    எந்நாளும் எங்கள் துணை நீரே

    4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
    துதியே துதியே துதித்திடுவேன்
    தேவா நீர் உந்தன் சிறகாலே
    தினமும் மூடிக் காத்தீரே
    தீதணு காதும் மறைவினிலே
    தேடியுமதடி தங்கிடுவேன்

    5. அல்லேலூயா தோத்திரமே
    துதியே துதியே துதித்திடுவேன்
    அகில சிருஷ்டிகளும் துதிக்க
    அடிமை துதியா திருப்பேனோ
    அல்லும் பகலும் நித்தியமாய்
    அன்பே உமையும் துதித்திடுவேன்

    Sthothiram Thuthi Pathira Ummai
    Indrum endrum thuththiduven
    Kaathire ennai karuthaga
    Valuvamal ennai umakkaga
    Edutheer ennayum umakkaga
    Kodutheer ummaiyum enakkaga

    1. Valla vana niyaana vinodha
    Thuthiye thuthiye thuththiduven
    Ella kuraiyum theertheere
    Thollai yavum tholaitheere
    Allal yavum arutheere
    Alaiyum ennaiyum meetteere

    2. Nambinorai kakkum dheva
    Thuthiye thuthiye thuththiduven
    Ambuviyaavum padaitheere
    Ambara unthan vaakale
    Embara ellam eenthire
    Nambinor kunthan thayavale

    3. Kannin manipol kaatheere emmai
    Thuthiye thuthiye thuththiduven
    Annale unthan arulale
    Adiyaarai kan paartheere
    Manna emakkum neer thaame
    Ennaalum engal thunai neere

    4. Theeyon ambugal thaakathe emmai
    Thuthiye thuthiye thuththiduven
    Dheva neer unthan siragale
    Thinamum moodi kaathire
    Theethanu kaathum maivinele
    Thediyumathadi thagiduven

    5. Alleluya sthothiram
    Thuthiye thuthiye thuththiduven
    Agila criustikalum thuikka
    Adimai thuthiyaa thiruppeno
    Allum pagalum nithiyaamaai
    Anbe umaiyum thuththiduven.

    Worship Songs Lyrics,David
    Sthothiram Thuthi Pathira Ummai - ஸ்தோத்திரம் துதி பாத்திரா : Lyrics Sthothiram Thuthi Pathira Ummai - ஸ்தோத்திரம் துதி பாத்திரா : Lyrics Reviewed by Christking on May 14, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.