Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து : Lyrics

உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்
1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்
2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே
3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்
4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்
5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே
Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து : Lyrics
Reviewed by Christking
on
May 07, 2016
Rating:

No comments: