Uyirththezhunthaare - உயிர்த்தெழுந்தாரே : Lyrics - Christking - Lyrics

    Uyirththezhunthaare - உயிர்த்தெழுந்தாரே : Lyrics

    Uyirththezhunthaare

    உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
    ஜெயித்தெழுந்தாரே
    உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
    சொந்தமானாரே

    1. கல்லறை திறந்திடவே
    கடும் சேவகர் பயந்திடவே
    வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
    வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்

    2. மரித்தவர் மத்தியிலே
    ஜீவ தேவனைத் தேடுவாரோ?
    நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
    நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்

    3. எம்மா ஊர் சீஷர்களின்
    எல்லா மன இருள் நீக்கினாரே
    எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
    எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்

    4. மரணமுன் கூர் எங்கே?
    பாதாள முன் ஜெய மெங்கே?
    சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
    சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்

    5. ஆவியால் இன்றும் என்றும்
    ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
    ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
    அல்லேலுயா துதி சாற்றிடுவோம் – உயிர்

    6. பரிசுத்தமாகுதலை
    பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
    எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
    எழும்புவோமே மகிமையிலே – உயிர்

    Uyirthezhundhaarae allaelooyaa
    Jeyithezhundhaarae
    Uyirudan ezhundha meetpar yaesen
    Sondhamaanaarae

    1. Kallarai thirandhidavae
    Kadum saevagar payandhidavae
    Vallavar yaesu uyirthezhundhaarae
    Valla pidhaavin seyalidhuvae – Uyir

    2. Marithavar mathiyilae
    Jeeva dhaevanai thaeduvaaroa?
    Needhiyin adhibadhi uyirthezhundhaarae
    Nithiya nambikkai perugidudhae – Uyir

    3. Emmaa voor seeshargalin
    Ellaa mana irul neekkinaarae
    Emmana kalakkangal neenginadhaalae
    Ellaiyillaa paramaanandhamae – Uyir

    4. Maranamun koor engae?
    Paadhaalamun jeyam engae?
    Saavaiyum noayaiyum paeyaiyum jeyithaar
    Sabaiyoarae thudhi saatriduvoam – Uyir

    5. Aaviyaal indrum endrum
    Aa emmaiyum uyirppikkavae
    Aaviyin achaaram enakkalithaarae
    Allealuyaa thudhi saatriduvoam – Uyir

    6. Parisuthamaaguthalai
    Bayathoadendrum kaathukkolvoam
    Ekkaalam dhonikkaiyil maruroobamaaga
    Ezhumbuvoamae magimaiyilae – Uyir

    Worship Songs Lyrics,
    Uyirththezhunthaare - உயிர்த்தெழுந்தாரே : Lyrics Uyirththezhunthaare - உயிர்த்தெழுந்தாரே : Lyrics Reviewed by Christking on May 01, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.