Vaa endrazhaikkum dheiva - வா என்றழைக்கும் தெய்வ : Lyrics - Christking - Lyrics

    Vaa endrazhaikkum dheiva - வா என்றழைக்கும் தெய்வ : Lyrics

    Vaa endrazhaikkum dheiva satham kaetkudhaa

    வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
    நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்

    1. உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
    அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
    உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
    அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
    உன் கஷ்டங்கள் அறிவார்
    உன் கண்ணீரை அறிவார்
    உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்

    2. உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
    உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
    உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
    உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
    உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
    முழுதான மனதோடு துதியோடு

    3. உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
    உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
    நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
    உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
    வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
    பதறாதே தயங்காதே மயங்காதே

    Vaa endrazhaikkum dheiva satham kaetkudhaa
    Nee thirumba maataaya unnai thedi paarkiraar

    1. Un norungunda idhayathai avaridam koduthaal
    Adhai sari seidhu marupadiyum unnidam koduppaar
    Un manavedhanaigalai nee solli azhudhaal
    Avvedhanaigalai theerthu aarudhal alipaar
    Un kashtangal arivaar
    Un kanneerai arivaar
    Unnai paarpaar unnai meetpaar unnai kaappaar

    2. Un manabaaram yaavaiyum avaridam sollu
    Unai vazhi kaatum iraivanidam muzhangaalil nillu
    Un uravugal kaivittaal uravaaga iruppaar
    Un udalunnai kaivittaal uyiraaga iruppaar
    Un dhevanai thedu avar paadhangal naadu
    Muzhudhaana manadhodu thudhiyodu

    3. Un sorvinai theerpadhu manidhargal illai
    Un noygalai theerpadhu marundhugal illai
    Nee pizhaithida oru vazhi un kristhu thaanay
    Un paavangal maraivadhum avaridam thaanay
    Veru vazhyai thedaadhey nee dhooram sellaadhay
    Padharaadhay thayangaadhay mayangaadhay

    Worship Songs Lyrics,
    Vaa endrazhaikkum dheiva - வா என்றழைக்கும் தெய்வ : Lyrics Vaa endrazhaikkum dheiva - வா என்றழைக்கும் தெய்வ : Lyrics Reviewed by Christking on April 30, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.