kasandha Mara Madhuramaagum : Lyrics - Christking - Lyrics

    kasandha Mara Madhuramaagum : Lyrics

    கசந்த மாரா மதுரமாகும்
    வசந்தமாக வாழ்க்கை மாறும்
    கண்ணீரோடே விதைத்தால்
    கெம்பீரமாய் அறுத்திடுவாய்- 2
    இன்று கண்ட எகிப்தியனை
    என்றுமே நீ காண்பதில்லை
    இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
    உறங்கவில்லை, தூங்கவில்லை

    1.தண்ணீரை நீ கடக்கும்போது
    கண்ணீரை அவர் துடைத்திடுவார்
    வெள்ளம் போன்ற சத்துரு வந்தால்
    ஆவியால் கொடி ஏற்றிடுவார் - இன்று

    2.வாதை உந்தன் கூடாரத்தை
    அணுகாமல் காத்திடுவார்
    பாதையிலே காக்கும்படிக்கு
    தூதர்களை நிறுத்திடுவார் - இன்று

    3.சோர்ந்து போன மகனே உனக்கு
    சத்துவத்தை அளித்திடுவார்
    கோரமான புயல் வந்தாலும்
    போதகத்தால் தேற்றிடுவார்- இன்று

    Songs Description :
    Song : kasandha Mara Madhuramaagum
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    kasandha Mara Madhuramaagum : Lyrics kasandha Mara Madhuramaagum : Lyrics Reviewed by Christking on September 28, 2016 Rating: 5
    Powered by Blogger.