Atiyil Etenil Atamukkevalai : Lyrics - Christking - Lyrics

    Atiyil Etenil Atamukkevalai : Lyrics

    ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கேவாளை
    அருளிச் செய்தீரே
    அவ்விதமாகவே அவ்விருபேரையும்
    இணைத்தருள்வீரே

    1. மங்களமாய் திருமறையைத் தொடங்கி
    மங்களமாய் முடித்தீர் - மங்கள
    மா மணவாளனாய் மைந்தரை
    மாநிலத்தில் விடுத்தீர்

    2. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்
    கருள் புரிந்தீரே - அங்ஙனமே இந்த
    மங்களம் செழிக்க ஆசியருள்வீரே

    3. கானாவூர் கலியாணம் கண்டு களித்த எம்
    கர்த்தரே வந்திடுவீர் - காசினி மீதிவர்
    நேசமாய் வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்

    4. இன்பமும் துன்பமும் இம்மணமக்கள்
    தாம் இசைந்து வாழ்ந்திடவே
    அன்பர் உம் பாதம் ஆதாரம் என்றும்மை
    அணுகச் செய்திடுவீர்

    Songs Description :
    Song : Atiyil Etenil Atamukkevalai
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Atiyil Etenil Atamukkevalai : Lyrics Atiyil Etenil Atamukkevalai : Lyrics Reviewed by Christking on October 01, 2016 Rating: 5
    Powered by Blogger.