Aiya Nan Vanthen - ஐயையா நான் வந்தேன் : Lyrics - Christking - Lyrics

    Aiya Nan Vanthen - ஐயையா நான் வந்தேன் : Lyrics



    பல்லவி

    ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
    ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

    சரணங்கள்

    துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
    துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
    செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
    தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா

    உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
    ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
    தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
    தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா

    எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
    எத்தனை எத்தனையோ !-இவை
    திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
    தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா

    ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
    தென்னை அரவணையும் ;-மனம்
    தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
    தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா

    மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
    மாறி அகன்றதுவே ,-இனி
    திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
    தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா

    Aiya Nan Vanthen - ஐயையா நான் வந்தேன் : Lyrics Aiya Nan Vanthen - ஐயையா நான் வந்தேன் : Lyrics Reviewed by Christking on July 01, 2017 Rating: 5
    Powered by Blogger.