Aanantha Padalgal Padiduven - Lyrics - Christking - Lyrics

    Aanantha Padalgal Padiduven - Lyrics


    ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
    எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
    அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே - நல்
    மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே

    1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் - தம்
    அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
    உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் - அங்கு
    பிழைத்திடவே அன்பர் சமூகமதில் --- ஆனந்த

    2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
    இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
    பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே - இந்தப்
    பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே --- ஆனந்த

    3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள - தேவன்
    என் பிதா ஆனதால் ஆனந்தமே
    ஏறெடுப்போம் நம் இதயமதை - என்றும்
    மாறாமல் பதில் தரும் மன்னனிடம் --- ஆனந்த

    4. மேலோக நாடெந்தன் சொந்தமதே - இந்த
    பூலோக நாட்டமும் குறைகின்றதே
    மாயையில் மனமினி வைத்திடாமல் - நேசர்
    காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் --- ஆனந்த

    5. அற்புதமாம் அவர் நேசமது - எந்தன்
    போர்பரன் சேவையின் பாக்யமது
    பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
    கற்புடன் அவர் பனி செய்திடவே --- ஆனந்த

    6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே - எந்தன்
    நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
    காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
    விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் --- ஆனந்த

    Aanantha Padalgal Padiduven - Lyrics Aanantha Padalgal Padiduven - Lyrics Reviewed by Christking on January 05, 2018 Rating: 5
    Powered by Blogger.