Aa Adaikalame Umathadimai Naanae - அடைக்கலமே உமதடிமை நானே - Christking - Lyrics

    Aa Adaikalame Umathadimai Naanae - அடைக்கலமே உமதடிமை நானே

    அடைக்கலமே உமதடிமை நானே
    ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
    கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
    நித்தம் நான் நினைப்பேன்

    1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே
    எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
    மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
    மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை

    2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
    சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
    நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
    பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை

    3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
    கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
    நடக்கும் வழிதனை காட்டுபவரே
    நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை

    4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
    கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
    குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
    அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை

    5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
    சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
    இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
    உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை
    Aa Adaikalame Umathadimai Naanae - அடைக்கலமே உமதடிமை நானே Aa Adaikalame Umathadimai Naanae - அடைக்கலமே உமதடிமை நானே Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.