Aarivar Aaraaro - ஆர் இவர் ஆராரோ - Christking - Lyrics

    Aarivar Aaraaro - ஆர் இவர் ஆராரோ

    ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே
    ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?

    1. பாருருவாகுமுன்னே – இருந்த
    பரப்பொருள் தானிவரோ?
    சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
    சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்

    2. மேசியா இவர்தானோ? – நம்மை
    மேய்த்திடும் நரர்கோனோ?
    ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
    அன்புள்ள மனசானோ? – ஆர்

    3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
    தேவனின் கண்மணியோ?
    மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
    மேவிய விண் ஒளியோ? – ஆர்

    4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
    பண்புடன் ஆள்பவனோ?
    கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
    காட்டிடுந் தாயகனோ? – ஆர்

    5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
    தீர்த்திடும் பானமோதான்?
    ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
    மானவர் இவர்தானோ? – ஆர்
    Aarivar Aaraaro - ஆர் இவர் ஆராரோ Aarivar Aaraaro - ஆர் இவர் ஆராரோ Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.