Abhisheka Natha - அபிஷேக நாதா அனல்

    Abhisheka Natha - அபிஷேக நாதா அனல்

    அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

    1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
    ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

    2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
    சத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

    3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
    திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா

    4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
    பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

    5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
    சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

    6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
    சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே – அபிஷேக நாதா
    Abhisheka Natha - அபிஷேக நாதா அனல் Abhisheka Natha - அபிஷேக நாதா அனல் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.