Ah Ambara Umbara - ஆ அம்பர உம்பர

    Ah Ambara Umbara - ஆ அம்பர உம்பர

    ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்
    ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!

    1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ
    அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
    உச்சிதவரனே! – ஆ!

    2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
    அல்லிராவினில் வெல்லையடியினில்
    புல்லணையிற் பிறந்தார் – ஆ!

    3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
    நன்னய உன்னத – பன்னரு மேசையா
    இந்நிலம் பிறந்தார் – ஆ!

    4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று
    கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
    கோத்திரன் பிறந்தார் – ஆ!

    5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
    மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
    விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!
    Ah Ambara Umbara - ஆ அம்பர உம்பர Ah Ambara Umbara - ஆ அம்பர உம்பர Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.