Appaavum Neere - அப்பாவும் நீரே எங்க - Christking - Lyrics

    Appaavum Neere - அப்பாவும் நீரே எங்க

    அப்பாவும் நீரே எங்க அம்மாவும் நீரே
    பேர் சொல்லி அழைத்தீரே என்னை

    அள்ளி அணைத்தீரே
    இந்த உலகில் உம்மைத்தவிர

    எனக்கு எவரும் இல்லையே – இந்த
    உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே

    1. தாய் முகத்தைப் பார்த்திருக்கேன்
    தந்தை முகம் பார்த்ததில்லை
    சொந்தமென்றும் பந்தம் என்றும்
    சொல்லிக் கொள்ள எவரும்மில்லே (2)
    நீர் எனக்குத் தந்தையானீர்
    நான் உமக்கு சொந்தமானேன் – அப்பாவும்

    2. தீங்கு வரும் நாளினிலே
    செட்டைகளின் மறைவினிலே
    பத்திரமாய் பாதுகாக்கும்
    பாசமுள்ள ஆண்டவரே
    நீர் செய்த நன்மைகளை
    நான் மறப்பது நியாயமில்லை – அப்பாவும்

    3. இல்லை என்று சொல்லி
    அழுதா இயேசு அதை சகிப்பதில்லை
    பிள்ளைகள் நாம அழுதா
    அப்பா மனம் பொறுப்பதில்லே
    நீர் மட்டும் இல்லையென்றால்
    நான் உயிர் வாழ்வதுமில்லை – அப்பாவும்
    Appaavum Neere - அப்பாவும் நீரே எங்க Appaavum Neere - அப்பாவும் நீரே எங்க Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.