Deva Janame Paadi - தேவஜனமே பாடித் துதிப்போம் - Christking - Lyrics

    Deva Janame Paadi - தேவஜனமே பாடித் துதிப்போம்


    தேவஜனமே பாடித் துதிப்போம்
    தேவ தேவனைப் போற்றிடுவோம்
    துதிகள் என்றும் ஏற்றியே
    அவரைப் பணிந்திடுவோம்

    சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
    காத்த தேவனைத் துதித்திடுவோம்
    நீதி தயவு கிருபை நல்கும்
    ஜீவதேவனைத் துதித்திடுவோம்

    வானம் பூமி ஆளும் தேவன்
    வாக்கை என்றுமே காத்திடுவார்
    அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
    மகிமை தேவனைத் துதித்திடுவோம்

    கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
    தேவமகிமை விளங்கிடவே
    தேவசுதராய் சேவை செய்து
    தேவராஜனை வாழ்த்திடுவோம்

    தம்மை நோக்கி வேண்டும்போது
    தாங்கி என்றுமே ஆதரிப்பார்
    மறந்திடாமல் உறங்கிடாமல்
    நினைத்த தேவனைத் துதித்திடுவோம்

    நமது போரை தாமே முடித்து
    ஜெயம் என்றும் அளித்திடுவார்
    சேனை அதிபன் நமது தேவன்
    அவரை என்றும் போற்றிடுவோம்


    Devajanamae Paatith Thuthippom
    Thaeva Thaevanaip Pottiduvom
    Thuthikal Entum Aettiyae
    Avaraip Panninthiduvom

    Senta Naalil Kannnnin Mannipol
    Kaaththa Thaevanaith Thuthiththiduvom
    Neethi Thayavu Kirupai Nalkum
    Jeevathaevanaith Thuthiththiduvom

    Vaanam Poomi Aalum Thaevan
    Vaakkai Entumae Kaaththiduvaar
    Avarin Unnmai Entum Nilaikkum
    Makimai Thaevanaith Thuthiththiduvom

    Karththar Naamam Ongippadara
    Thaevamakimai Vilangidavae
    Thaevasutharaay Sevai Seythu
    Thaevaraajanai Vaalththiduvom

    Thammai Nnokki Vaenndumpothu
    Thaangi Entumae Aatharippaar
    Maranthidaamal Urangidaamal
    Ninaiththa Thaevanaith Thuthiththiduvom

    Namathu Porai Thaamae Mutiththu
    Jeyam Entum Aliththiduvaar
    Senai Athipan Namathu Thaevan
    Avarai Entum Pottiduvom

    Deva Janame Paadi - தேவஜனமே பாடித் துதிப்போம் Deva Janame Paadi - தேவஜனமே பாடித் துதிப்போம் Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.