Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த சபையே - Christking - Lyrics

    Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த சபையே

    தேவசுதன் மீட்டெடுத்த சபையே
    என்றும் கர்த்தரின் புகழைப்பாடு
    சொல்லுங்களேன் அவர் நாமத்தையே
    போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன்
    மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம்

    தம்புருவீணை நாதம் இசைக்க - பேரோசையுள்ள
    கைத்தாளத்தின் தொனிமுழங்க
    ஆவியால் நிறைவோம்
    புது பெலனை அடைந்து துதிப்போம்
    உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம்
    அவர் சமூகம் என்றென்றும் இன்பமே

    வல்லமையாக இறங்கிடுவார் - தேவனின் ஆவி
    சத்தியபாதை நடத்திடுவார்
    துணையாய் வருவார்
    அவர் வல்லமை நம்மீது பொழியும்
    உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம்
    என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம்

    தேவஜனங்கள் துதிப்பதினால் - தேவனின் உள்ளம்
    பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான்
    தேவகிருபை நம்மீது பொழியும்
    சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த
    தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம்
    Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த சபையே Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த சபையே Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.