Devan Namathu - தேவன் நமது அடைக்கலமும் - Christking - Lyrics

Devan Namathu - தேவன் நமது அடைக்கலமும்

தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்துக் காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்

பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்

யுத்தங்களைத் தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்

அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்
Devan Namathu - தேவன் நமது அடைக்கலமும் Devan Namathu - தேவன் நமது அடைக்கலமும் Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.