En Meetpar En Nesar - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

    En Meetpar En Nesar - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

    என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
    எப்போது நான் நிற்கப் போகிறேன்
    ஏங்குகிறேன் உம்மைக் காண
    எப்போது உம் முகம் காண்பேன்
    தாகமாய் இருக்கிறேன்
    அதிகமாய்த் துதிக்கிறேன் -நான்

    மானானது நீரோடையை
    தேடி தவிப்பது போல்
    என் நெஞ்சம் உம்மைக்காண
    ஏங்கித் தவிக்கிறது - தாகமாய்

    பகற்காலத்தில் உம் பேரன்பை
    கட்டளையிடுகிறீர்
    இராக்காலத்தில் உம் திருப்பாடல்
    என் நாவில் ஒலிக்கிறது

    ஆத்துமாவே நீ கலங்குவதேன்
    நம்பிக்கை இழப்பதேன் -என்
    கர்த்தரையே நீ நம்பியிரு
    அவர் செயல்களை நினைத்துத் துதி
    ஜீவனுள்ள தேவன்
    அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன்
    En Meetpar En Nesar - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் En Meetpar En Nesar - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.