En Paaththiram Nirambi - என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது

    En Paaththiram Nirambi - என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது

    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
    வழிந்து ஓடுகின்றது

    எனக்குள்ளே ஜீவஊற்று
    அது வற்றாது ஒரு நாளும் - என் பாத்திரம்

    அபிஷேகன் நதி நானே
    அகிலமெங்கும் பரவிடுவேன்
    ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
    நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
    இடமெல்லாம்-எனக்கு

    ஆனந்த தைலம் நானே
    புலம்பலுக்கு எதிரானேன்
    துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
    அலங்காரமாக்கிடுவேன் -சபையை

    கனி கொடுக்கும் மரம் நானே
    நாள்தோறும் கனி கொடுப்பேன்
    இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்
    விருந்தும் மருந்தும் நானே - சபைக்கு

    முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
    ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
    காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
    விடுதலை பறைசாற்றுவேன்

    அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
    இறைவாக்கு உரைத்திடுவேன்
    சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
    அதிசயம் தினம் காண்பேன்
    En Paaththiram Nirambi - என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது En Paaththiram Nirambi - என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.