En yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை - Christking - Lyrics

    En yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை

    என் இயேசுவே என் நம்பிக்கை
    எனக்கெல்லாம் நீர் ஐயா
    உம்மை மறவேனே உருவாக்கினீரே
    எனக்கெல்லாம் நீர் ஐயா

    துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்
    கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் - உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
    கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை

    கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும்
    கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் - உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்
    கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்

    வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்
    வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் - உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
    வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்
    En yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை En yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை Reviewed by Christking on May 04, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.