Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

    Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

    என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
    உமக்கு நன்றி சொல்வேன்
    உமது புகழ் பாடுவேன்

    தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
    தூய மகனாக்கினீர்
    துதிக்கும் மகளாக்கினீர் - இராஜா

    இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
    இரவும் பகலும் புகழ் பாடுவேன் - என்ன

    ஆவியினாலே அன்பையே ஊற்றி
    பாவங்கள் நீக்கினீரே
    சுபாவங்கள் மாற்றினீரே - இராஜா

    இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
    எதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசு
    நினைத்துப் பாடுகிறேன் - இராஜா

    இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
    உறவாடச் செய்தீரையா
    உம்மோடு இணைத்தீரையா

    மரணத்தை அழித்து அழியா ஜீவனை
    அறிமுகப்படுத்தினீரே
    அறிவிக்க அழைத்தீரே - இதை
    Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.