Jebame En Vaazhvin - ஜெபமே என் வாழ்வில் - Christking - Lyrics

    Jebame En Vaazhvin - ஜெபமே என் வாழ்வில்

    Jebame En Vaazhvin PPT-Download

    ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
    ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
    ஜெபமின்றியே ஜெயமில்லையே
    ஜெப சிந்தை எனில் தாருமே

    இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
    இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
    பொறுமையுடன் காத்திருந்தே
    போராடி ஜெபித்திடவே

    சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
    சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
    என் மாம்சத்தின் பெலவீனத்தில்
    ஆவியின் பெலன் தாருமே

    எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
    பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
    துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
    உபவாசம் எனில் தாருமே

    முழங்காலில் நின்றே முழு மனதுடனே
    விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
    உம் வருகை நாளதிலே
    உம்முடன் சேர்ந்திடவே

    Jebame En Vaazhvin Lyrics In English

    Jepamae En Vaalvil Seyalaaka Maara
    Jepa Aaviyaal Ennai Niraiththidumae
    Jepamintiyae Jeyamillaiyae
    Jepa Sinthai Enil Thaarumae

    Iravellaam Jepiththa En Thaevanae Um
    Ithayaththin Paaram Ennilum Thaarum
    Porumaiyudan Kaaththirunthae
    Poraati Jepiththidavae

    Sothanaiyanukaa Vilippudan Jepikka
    Sothanaiyathilum Sornthidaa Jepikka
    En Maamsaththin Pelaveenaththil
    Aaviyin Pelan Thaarumae

    Entha Samayamum Ellaa Manitharkkum
    Parisuththavaankal Pannikal Palanukkum
    Thuthi Sthoththiram Jepam Vaennduthal
    Upavaasam Enil Thaarumae

    Mulangaalil Ninte Mulu Manathudanae
    Visuvaasam Uruthiyil Unnmaiyaay Jepikka
    Um Varukai Naalathilae
    Ummudan Sernthidavae

    Jebame En Vaazhvin - ஜெபமே என் வாழ்வில் Jebame En Vaazhvin - ஜெபமே என் வாழ்வில் Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.