Kal Mithikum Desam Ellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் - Christking - Lyrics

    Kal Mithikum Desam Ellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம்

    கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்
    கர்த்தருக்குச் சொந்தமாகும்
    கண் பார்க்கும் பூமியெல்லாம்
    கல்வாரி கொடி பறக்கும்

    பறக்கட்டும் பறக்கட்டும்
    சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா
    உயரட்டும் உயரட்டும்
    இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா

    எழும்பட்டும் எழும்பட்டும்
    கிதியோனின் சேனைகள்
    முழங்கட்டும் முழங்கட்டும்
    இயேசுதான் வழியென்று

    செல்லட்டும் செல்லட்டும்
    ஜெபசேனை துதிசேனை
    வெல்லட்டும் வெல்லட்டும்
    எதிரியின் எரிகோவை

    திறக்கட்டும் திறக்கட்டும்
    சுவிசேஷ வாசல்கள்
    வளரட்டும் வளரட்டும்
    அபிஷேக திருச்சபைகள்
    Kal Mithikum Desam Ellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் Kal Mithikum Desam Ellam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.