Karthar Seiya Ninaithathu - கர்த்தர் செய்ய நினைத்தது - Christking - Lyrics

    Karthar Seiya Ninaithathu - கர்த்தர் செய்ய நினைத்தது

    கர்த்தர் செய்ய நினைத்தது
    ஒன்றும் தடைபடாது
    தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்
    ஜெயமாய் நடத்துவார் - உன்னை (நம்மை)
    ஜெயமாய் நடத்துவார்
    அல்லேலூயா... அல்லேலூயா (8)

    இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்
    கர்த்தருக்கு பிரியமானதே
    அபிரகாமை ஆசிர்வதித்தவர்
    உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
    சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே
    கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் - அல்லேலூயா

    வழியே இல்லா இடங்களிலும் - புது
    வழியை உனக்கு உண்டாக்குவார்
    இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் - ஜீவ
    ஒளியை இன்று ஏற்றிடுவார்
    வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் - புது
    வாசல் உனக்கு திறந்திடுவார்
    Karthar Seiya Ninaithathu - கர்த்தர் செய்ய நினைத்தது Karthar Seiya Ninaithathu - கர்த்தர் செய்ய நினைத்தது Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.