Nadanam Aadi Thotharippen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் - Christking - Lyrics

    Nadanam Aadi Thotharippen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

    நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
    நாதா நான் உம்மைத் துதிப்பேன்
    கைத்தாள ஓசையுடன்
    கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்

    காண்பவரே காப்பவரே
    கருணை உள்ளவரே
    காலமெல்லாம் வழி நடத்தும்
    கன்மலையே ஸ்தோத்திரம் - ஐயா

    வல்லவரே நல்லவரே
    கிருபை உள்ளவரே
    வரங்களெல்லாம் தருபவரே
    வாழ்வது உமக்காக - ஐயா

    ஆண்டவரே உம்மைப்
    பிரிந்து யாரிடத்தில் போவோம்
    வாழ்வு தரும் வசனமெல்லாம்
    உம்மிடம்தான் உண்டு - ஐயா

    அற்புதமே அதிசயமே
    ஆலோசனைக் கர்த்தரே
    அண்டி வந்தோம் ஆறுதலே
    அடைக்கலமானவரே
    Nadanam Aadi Thotharippen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் Nadanam Aadi Thotharippen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.