Nandri Seluthuvaye En - நன்றி செலுத்துவாயே என் - Christking - Lyrics

Nandri Seluthuvaye En - நன்றி செலுத்துவாயே என்

நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா

அன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே

தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே

அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே

வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே

உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக

ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக
Nandri Seluthuvaye En - நன்றி செலுத்துவாயே என் Nandri Seluthuvaye En - நன்றி செலுத்துவாயே என் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.