Ninaivu Koorum Deivame - நினைவு கூரும் தெய்வமே நன்றி - Christking - Lyrics

    Ninaivu Koorum Deivame - நினைவு கூரும் தெய்வமே நன்றி

    நினைவு கூரும் தெய்வமே நன்றி
    நிம்மதி தருபவரே நன்றி

    நன்றி இயேசு ராஜா

    நோவாவை நினைவு கூர்ந்ததால்
    பெருங்காற்று வீசச் செய்தீரே - அன்று
    தண்ணீர் வற்றியதைய்யா
    விடுதலையும் வந்ததைய்யா

    ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
    லோத்துவைக் காப்பாற்றினீரே
    எங்களையும் நினைவு கூர்ந்து
    எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா

    அன்னாளை நினைவு கூர்ந்ததால்
    ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
    மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர்)
    மாற்றுகிறீர் நன்றி ஐயா - எங்கள்

    கொர்நெலியு தான தர்மங்கள் - ஒரு
    தூதனைக் கொண்டு வந்தது
    குடும்பத்தையும் நண்பர்களையும்
    இரட்சித்து அபிஷேகித்தீரே - அவன்

    ராகேலை நினைவு கூர்ந்ததால்
    யோசேப்பை பரிசாய் தந்தீரே
    இன்னுமொரு மகனைத் தருவீர்
    என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

    எக்காளம் ஊதும் போதெல்லாம்
    எங்களை நினைக்கின்றீர்
    எதிரிகளின் கையிலிருந்து
    இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்
    Ninaivu Koorum Deivame - நினைவு கூரும் தெய்வமே நன்றி Ninaivu Koorum Deivame - நினைவு கூரும் தெய்வமே நன்றி Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.