Paadham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் - Christking - Lyrics

    Paadham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும்

    பாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப்
    பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்

    நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற்
    காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய-

    சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
    பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன்-

    வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
    ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற்-

    போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
    நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற்-

    நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேறவல்
    ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன்-

    பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
    சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன்-
    Paadham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் Paadham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.