Paadi Thuthi Maname - பாடித் துதி மனமே பரனைக் - Christking - Lyrics

Paadi Thuthi Maname - பாடித் துதி மனமே பரனைக்

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்

சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்

எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை
Paadi Thuthi Maname - பாடித் துதி மனமே பரனைக் Paadi Thuthi Maname - பாடித் துதி மனமே பரனைக் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.