Paavam Pokkum Jeevanathiyai - பாவம் போக்கும் ஜீவநதியைப் - Christking - Lyrics

    Paavam Pokkum Jeevanathiyai - பாவம் போக்கும் ஜீவநதியைப்

    பாவம் போக்கும் ஜீவநதியைப்
    பாரீர் வந்து பாரீர் - பாரில்

    தீவினை தீர்க்கும் தேவமறியின்
    திருரத்த மிந்த ஆறாம் - பாரில்

    கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
    கண்கள் ஐந்து திறந்தே - அதோ
    மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
    வழிந்தோடுது பாரீர் - பாரில்

    பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
    பதறி விழுந் தலறி - நிதம்
    கூவியழுத அனந்தம் பேரிதில்
    குளித்தே யுளங் களித்தார் - பாரில்

    பத்தருளத்தி லிடைவிடாமல்
    பாய்ந்து வளமீந்து - அதை
    நித்தமும் பரிசுத்த குணத்தில்
    நிலைநாட்டுது பாரீர் - பாரில்

    ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்
    உண்டோ ஜீவன் கண்டோர் - தாகம்
    அறுதி யடைவர் வேறொருதிநதிக்
    கலையார் தேடி யலையார் - பாரில்

    நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
    நீரார் நிதியிதிலே - தங்கள்
    வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
    வாழ்ந்துகீதம் பாட - பாரில்
    Paavam Pokkum Jeevanathiyai - பாவம் போக்கும் ஜீவநதியைப் Paavam Pokkum Jeevanathiyai - பாவம் போக்கும் ஜீவநதியைப் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.