Paavikku Pukalidam - பாவிக்குப் புகலிடம் - Christking - Lyrics

    Paavikku Pukalidam - பாவிக்குப் புகலிடம்

    பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர்
    பாரினில் பலியாக மாண்டாரே

    பரிசுத்தரே பாவமானாரே
    பாரமான சிலுவை சுமந்தவரே

    காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
    காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
    கொலை செய்யவே கொண்டு போனாரே
    கொல்கதா மலைக்கு இயேசுவை -2

    கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
    குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
    பரிகாசமும் பசிதாகமும்
    படுங்காயமும் அடைந்தாரே -2

    கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
    கிரீடம் முள்களில் பின்னி சூடிட
    இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
    இதைக் கானும் உள்ளம் தாங்குமோ -2

    உலகத்தின் இரட்சகர் இயேசுவே
    உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
    தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
    தளராமல் நம்பி ஓடி வா -2

    பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
    பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
    கண்டு நீ மனம் கலங்குவதேன்
    கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா -2

    வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
    வாருங்கள் என்னண்டையில் எங்கிறார்
    இளைப்பாறுதல் தரும் இயேசுவை
    இன்று தேடி நாடி நம்பி வா -2
    Paavikku Pukalidam - பாவிக்குப் புகலிடம் Paavikku Pukalidam - பாவிக்குப் புகலிடம் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.