Panipani Thuli Pol Pozhigirathe - பனித்துளி போல் பொழிகிறதே - Christking - Lyrics

Panipani Thuli Pol Pozhigirathe - பனித்துளி போல் பொழிகிறதே

பனித்துளி போல் பொழிகிறதே
தேவனின் அபிஷேகம் பின்மாரியின்
மழை பொழியும் காலம் வந்ததே

ஒருமனதோடு சபையாரெல்லாம்
ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள்
கர்த்தர் பெரிய காரியம் செய்யும்
வேளை வந்ததே வேளை வந்ததே

தலை குனிந்து வாழ்ந்தது போதும்
தலையை உயர்த்திடு
சிங்கத்தை போல கெர்ச்சித்து
எதிரியை துரத்திடு
எங்கும் தேவனை தொழுது
கொள்ளும் காலம் வந்ததே
எழுப்புதலடைந்து இயேசுவின்
நாமத்தை எங்கும் உயர்த்துவோம்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

கோலியாத்தின் சத்தம் கேட்டு
பயந்து போகாதே
உனக்குள் இருக்கும் தேவனை
நீ மறந்து போகாதே
விசுவாசமென்னும் கேடகத்தாலே
ஜெயத்தை பெற்றிடு
சத்துருவை உன் காலின் கீழே
மிதித்து எறிந்திடு

உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்
தெரிந்து கொண்டாரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
நமக்கு தந்தாரே
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்லுவோம்
சத்துரு மேலே கொடியை ஏற்றி
தேசத்தை சுதந்தரிப்போம்
Panipani Thuli Pol Pozhigirathe - பனித்துளி போல் பொழிகிறதே Panipani Thuli Pol Pozhigirathe - பனித்துளி போல் பொழிகிறதே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.