Pesu Sabaiye Pesu - பேசு சபையே பேசு - Christking - Lyrics

Pesu Sabaiye Pesu - பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு,பேசு சபையே பேசு
இது உலர்ந்த எலும்புகள்
உயிர் பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள்
புது பெலன் பெற்று கொள்ளும் நாட்கள்

இது கோணல்கள் யாவும்
நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள்
செவ்வையாக மாறிடும் நாட்கள்

நரம்புகள் உருவாகும் எலும்புகள்
ஒன்று சேரும் தசைகளும் புதிதாக தோன்றும்
ஆவியின் அசைவாலும்
கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும்

மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும்
பெருகிடவே பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்ததாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வணங்கும் அதனால்

ஜாதிகள் ஓங்கிடவும்(நடுங்கிடவும்)
தேசங்கள் வியந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில்
துதிக்கின்ற சேனை ஒன்று
கர்த்தரின் ஜிவன் பெற்று எழும்பும்

ஜீவனை பேசு இரட்சிப்பை பேசு
சுவாசத்தைப் பேசு அற்புதத்தை பேசு
சபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடு
போற்று சபையே போற்று
Pesu Sabaiye Pesu - பேசு சபையே பேசு Pesu Sabaiye Pesu - பேசு சபையே பேசு Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.