Ponnagar Payanam Pogum - பொன்னகர் பயணம் போகும் - Christking - Lyrics

    Ponnagar Payanam Pogum - பொன்னகர் பயணம் போகும்

    பொன்னகர் பயணம் போகும் புண்ணியர்களே - மகிமை
    என்னவென்றுரைக்க வல்லோர் யாருமில்லையே

    உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ - அவர்
    தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை

    லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே - அவர்
    நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே

    வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர் - இன்று
    வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ

    மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும் - யேசு
    தன்னுரு வோடே எழுப்பும் சத்தியம் இதே

    கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில் - சென்றோர்
    நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார்

    ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு - புதுப்
    பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார்

    கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கிய ரென்று - சொல்லும்
    உத்தம் வேதத்தின் உண்மை உன்னத மல்லோ
    Ponnagar Payanam Pogum - பொன்னகர் பயணம் போகும் Ponnagar Payanam Pogum - பொன்னகர் பயணம் போகும் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.