Parama Vithiya Arumai - பரம வைத்தியா அருமை - Christking - Lyrics

    Parama Vithiya Arumai - பரம வைத்தியா அருமை

    பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்
    வைத்தியப் பணியினை ஆசீர்வதியும் ஐயனே

    பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே - மருந்தோடே உமது
    பேரதிசய கிருபை கூருமே

    உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் - அவருடன் துணைநின்று
    உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும்

    சயமும் சுரமும் பயமுறுத்துமே - இதைத் தடுத்திடக் கொடை
    தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே

    அரிய நூதன முறைகள் காணவே - ஆராய்ச்சிகள் செய்யும்
    அறிஞரால் புது வழிகள் தோன்றவே

    ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
    ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா
    Parama Vithiya Arumai - பரம வைத்தியா அருமை Parama Vithiya Arumai - பரம வைத்தியா அருமை Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.