Ponnana Yesuvai - பொன்னான இயேசுவை - Christking - Lyrics

    Ponnana Yesuvai - பொன்னான இயேசுவை

    பொன்னான இயேசுவை
    புண்ணிய நல் நேசரை - கொண்டு
    செல்வோம் பூலோகமெங்கும்
    அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

    தேவனே வந்து நம்மை நடத்திடுவார்
    தேவையறிந்து பயன்படுத்திடுவார்

    அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்
    அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை
    அஞ்சாமல் செல்வோம்
    வஞ்சகனை வெல்வோம் - அரணான
    கோட்டைகளை பிடித்திடுவோம் - நாம்

    (அவர்) எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்
    இந்த நாளில் எங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
    எத்தனையோ நோய்கள்
    அத்தனையும் போக்கும் - இயேசுவின்
    இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்

    காலமும் கடலலையும் காத்திருக்காது
    இந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம்
    கல்லான நெஞ்சம் கரைந்திடச் செய்யும்
    கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் - நாம்
    Ponnana Yesuvai - பொன்னான இயேசுவை Ponnana Yesuvai - பொன்னான இயேசுவை Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.