Posanandhanu Mundo Thirurap - போசனந்தானு முண்டோ திருராப் - Christking - Lyrics

Posanandhanu Mundo Thirurap - போசனந்தானு முண்டோ திருராப்

போசனந்தானு முண்டோ திருராப்
போசனம் போலுலகில்

ராசரும் வையக நீசரும் அம்பரன்
நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப்

கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்
கன்மி கட்கானமெய் நேசத்தின் போசனம்
பத்தரை யன்றாய் இணைத்திடும் போசனம்
பஞ்சகாத்தும் கிடைத்திடும் போசனம்

பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்
பொன் வானதூதரும் உண்ணாத போசனம்
ஓர் காலமும் குறைவாகாத போசனம்
ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம்

பஸ்காப் பலியின் பொருள் என்னும் போசனம்
பாவி புசிக்கும் சமாதான போசனம்
நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்
நின்மலன் தந்திடும் அற்புத போசனம்

மாமலைப் பீடப் பலியான போசனம்
மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்
ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்
அத்தனார் மெய்மொழியாலான போசனம்

மாமிசம் அப்பத் தோடே வரும் போசனம்
வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்
பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்
பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம்

ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்
ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்
தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்
சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம்

செத்தும் உயிரோ டெழுப்பிடும் போசனம்
சீவனோ டென்றென்று வாழ்விக்கும் போசனம்
நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்
நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம்
Posanandhanu Mundo Thirurap - போசனந்தானு முண்டோ திருராப் Posanandhanu Mundo Thirurap - போசனந்தானு முண்டோ திருராப் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.