Puthiya Padal Padi Padi - புதிய பாடல் பாடி பாடி இயேசு - Christking - Lyrics

    Puthiya Padal Padi Padi - புதிய பாடல் பாடி பாடி இயேசு

    புதிய பாடல் பாடி பாடி இயேசு
    ராஜாவைக் கொண்டாடுவோம்
    புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
    ராஜாவைக் கொண்டாடுவோம்

    கழுவினார் இரத்தத்தாலே
    சுகம் தந்தார் காயத்தாலே
    தேற்றினார் வசனத்தாலே
    திடன் தந்தார் ஆவியாலே -எனக்கு

    உறுதியாய் பற்றிக் கொண்டோம்
    உம்மையே நம்பி உள்ளோம்
    பூரண சமாதானம்
    புவிதனில் தருபவரே -தினமும்

    அதிசயமானவரே
    ஆலோசனைக் காத்தரே
    வல்லமையுள்ள தேவா
    வரங்களின் மன்னவனே -எல்லா

    கூப்பிட்டேன் பதில் வந்தது
    குறைவெல்லாம் நிறைவானது
    மகிமையின் ராஜா அவர்
    மகத்துவமானவரே -இயேசு

    மாலையில் அழுகை என்றால்
    காலையில் அக்களிப்பு
    கோபமோ ஒரு நிமிடம்
    கிருபையோ நித்தம் நித்தம் -அவர்
    Puthiya Padal Padi Padi - புதிய பாடல் பாடி பாடி இயேசு Puthiya Padal Padi Padi - புதிய பாடல் பாடி பாடி இயேசு Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.