Paaduvoam Magilvoam - பாடுவோம் மகிழ்வோம் - Christking - Lyrics

    Paaduvoam Magilvoam - பாடுவோம் மகிழ்வோம்

    பாடுவோம் மகிழ்வோம்
    கொண்டாடுவோம்
    அப்பா சமூகத்தில் பாடி
    மகிழ்ந்து கொண்டாடுவோம்

    அக்கினி மதில் நீரே
    ஆறுதல் மழை நீரே
    இக்கட்டில் துணை நீரே
    இருளில் வெளிச்சம் நீரே

    நன்றி நன்றி நன்றி -2

    துயர் நீக்கும் மருத்துவரே
    என் துதிக்குப் பாத்திரரே
    பெலனெல்லாம் நீர்தானையா
    பிரியமும் நீர்தானையா - என்

    கல்வாரி சிலுவையினால் - என்
    சாபங்கள் உடைந்ததையா
    ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் - இந்த
    அடிமைக்குக் கிடைத்ததையா

    இயேசுவே உம் இரத்தத்தால்
    என்னை நீதிமானாய் மாற்றினீரே
    பரிசுத்த ஆவி தந்து - உம்
    அன்பை ஊற்றினீரே

    உம்மையே நம்பி வாழ்வதால்
    உமக்கே சொந்தமானேன் - என்
    உயிரான கிறிஸ்து வந்தால் - உம்
    உறவுக்குள் வந்துவிட்டேன்

    இவ்வுலகப் போக்கின்படி
    நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
    உம்மோடு இணைத்தீரைய்யா -உம்
    மிகுந்த இரக்கத்தினால்

    வாழ்வு தரும் ஊற்று நீரே
    வழிகாட்டு தீபம் நீரே
    புயலில் புகலிடமே - கடும்
    வெயிலில் குளிர் நிழலே

    பேரின்ப நீரோடையில்
    என் தாகம் தணிப்பவரே
    உமது பேரன்பு - அது
    எத்தனை மேலானது
    Paaduvoam Magilvoam - பாடுவோம் மகிழ்வோம் Paaduvoam Magilvoam - பாடுவோம் மகிழ்வோம் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.