Rajathi Rajavaga Arasalum - ராஜாதி ராஜாவாக அரசாளும் - Christking - Lyrics

Rajathi Rajavaga Arasalum - ராஜாதி ராஜாவாக அரசாளும்

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மை போன்ற தெய்வம் இல்லை
உம்மை போன்ற கர்த்தர் இல்லை
ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே(2)

உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தகாரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே

நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம்
உம்மில் தான் உண்டே

பாவம் போக்க பாலானாக
மண்ணில் வந்தவரே உலகை ஆளும்
ராஜாவாக மீண்டும் வருவீரே

கண்ணீர் கவலை கஷ்டம் யாவும்
நீக்கிப் போட்டீரே - சந்தோஷமும்
சமாதானமும் நிறைவாய்த் தந்தீரே

ஆட்சி மாறா அரசாங்கத்தை
ஆளும் எங்கள் ஆளுநரே
சிலுவைக்கட்சி உமது கட்சி
என்றும் அதுவே ஆளுங்கட்சி

ராஜாதி ராஜா இயேசுவே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
தேவாதி தேவன் இயேசுவே
மன்னாதி மன்னன் இயேசுவே
மரணத்தை வென்றவர் இயேசுவே
பரலோகம் சென்றவர் இயேசுவே
மீண்டும் வருவாரே இயேசுவே
Rajathi Rajavaga Arasalum - ராஜாதி ராஜாவாக அரசாளும் Rajathi Rajavaga Arasalum - ராஜாதி ராஜாவாக அரசாளும் Reviewed by Christking on May 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.